×

விவாத் சே விஸ்வாஸ் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை: வரி வழக்குகளை சுமூகமாக தீர்த்துக்கொள்ள ‘விவாத் சே விஸ்வாஸ்’ திட்டம் கொண்டு வரப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கம் ஆயகர் பவன் வைகை ஹாலில் உள்ள வருமானவரி துறை அலுவலகத்தில் இந்திய பட்டய கணக்காயர் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல கவுன்சில் (எஸ்ஐஆர்சி) நேற்று ஏற்பாடு செய்தது. இதை தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான வருமான வரித்துறை முதன்மை ஆணையர் அனு ஜெ.சிங் துவக்கி வைத்தார்.

அப்போது, இந்த திட்டத்தின் மூலம் நிலுவையில் உள்ள வரி வழக்குகளுக்கு தீர்வு காண முடியும். அரசுக்கு வருவாய் கிடைப்பதோடு, வரி செலுத்துவோரும் வழக்கில் இருந்தும், அபராதம், வட்டி, டிசிஎஸ், டிசிஎஸ் கட்டணம் ஆகியவற்றை செலுத்துவதில் விடுபட்டு நிம்மதி அடைவார்கள் என விவரித்தார். நிகழ்ச்சியில், தென்னிந்திய மண்டல கவுன்சில் தலைவர் துங்கார் சந்த் ஜெயின், வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் ஷாஜி ஜேக்கப், எஸ்ஐஆர்சி செயலாளர் அபிஷேக் முரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Vivad Se Vishwas, Project, Awareness, Program
× RELATED புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ...